வெளிநாட்டில் 600 அடி பள்ளத்தில் விழுந்து உயிரை விட்ட இந்திய இளைஞர்: நடந்தது என்ன?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அயர்லாந்து கடற்கரை பகுதியில் புகைப்படம் எடுக்கும்போது இந்திய இளைஞர் ஒருவர் 600 அடி பள்ளத்தில் விழுந்து உயிரை விட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சம்பவம் நடந்த பகுதியானது சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிகம் விரும்பிச் செல்லும் பகுதிகளில் ஒன்று என கூறப்படுகிறது.

26 வயது ஆனந்த் கோயல் என்பவரே புகைப்படம் எடுக்கும்போது பள்ளத்தில் விழுந்து உயிரை விட்டவர்.

இந்திய தலைநகர் டெல்லியை சேர்ந்த இவர் டிரினிட்டி கல்லூரி டப்ளின் மாணவராவார். கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த விவகாரத்தில்,

விசாரணையை முடித்துள்ள அதிகாரிகள், இது ஒரு விபத்து மரணம் என முடிவுக்கு வந்துள்ளனர். மட்டுமின்றி, சம்பவம் நடந்த பகுதியானது மிகவும் ஆபத்தான பகுதி எனவும் தெரியவந்துள்ளது.

கோயலின் மரணம் திட்டமிட்ட கொலையோ, அல்லது தற்கொலையோ அல்ல எனவும், புகைப்படம் எடுக்கும்போது அவர் தவறி விழுந்ததாகவே சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் விசாரணை அதிகாரிகளிடம் பதிவு செய்துள்ளனர்.

புகைப்படம், நன்றாக அமைய வேண்டும் என்பதால், கோயல் குன்றின் விளிம்புக்கு சென்றதாகவும், அதுவே அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்