காதலியை 196 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த இளம்பெண்: அம்பலமான அதிரவைக்கும் பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் பணம் கடம் தர மறுப்பு தெரிவித்த தமது காதலியை துரத்திச் சென்று கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த ஒருபால் ஈர்ப்பு இளம்பெண்ணுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் சீனாவின் ஹூனான் பிராந்தியத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதே நாளில் குறித்த இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். 28 வயதான Fang Yao என்ற இளம்பெண் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருடன் கொல்லப்பட்ட 26 வயதான Wang Lei என்பவரும் பணியாற்றியுள்ளார். தன்பாலின ஈர்ப்பு கொண்ட இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Fang Yao சூதாட்டத்தில் அதிக நாட்டம் காட்டியதுடன், அதில் அடிமையாகவே மாறியுள்ளார். தமது பணத் தேவைகளுக்காக காதலியான Wang இடம் இருந்து கடன் பெற்று வந்துள்ளார் ஃபாங்.

சூதாட்ட மோகத்தால் ஃபாங் மொத்தம் 84,000 பவுண்டுகள் வரை பலரிடம் இருந்து கடனாக பெற்றுள்ளார். இதில் வாங்கின் பணம் 23,000 பவுண்டுகள் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி பணப் பிரச்னைகளால் காதலிகள் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று தமது காதலியை சந்தித்த ஃபாங், மீண்டும் பணம் தேவைப்படுவதாக கூறி கடன் கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த வாங்-ஐ மறைத்து வைத்திருந்த கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார் ஃபாங்.

அவர் சந்தித்த அந்த ஹொட்டலில் 9-வது மாடியில் இருந்து தரை தளம் வரை ஃபாங் துரத்தி துரத்தி தாக்கியுள்ளார்.

இதில் கழுத்து உடம்பு என சுமார் 197 முறை ஃபாங் தமது காதலியை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வாங் சம்பவயிடத்திலேயே மரணமடைந்தார்.

இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவுக்கு வந்த நிலையில் கொலை குற்றம் சாட்டப்பட்ட ஃபாங் என்பவருக்கு மரண தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்