6 மாதத்தில் பிறந்த குழந்தை... குழப்பத்தில் அழகியை திருமணம் செய்து விவாரகரத்து செய்த மன்னர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மலேசியா மன்னரை திருமணம் செய்த ரஷ்யா மொடலுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதால், அதைப் பற்றி தான் இப்போது அங்கிருக்கும் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மலேசியா நாட்டின் 15-வது மன்னரான சுல்தான் முகம்மது, கடந்த 2015-ஆம் ஆண்டில் ரஷ்யாவைச் சேர்ந்த மொடல் அழகி ரிஹானா ஒக்சனா வியோடினாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானதால், மன்னர்

வெளி உலக மக்களுக்கு தெரியும் வகையில் கடந்த நவம்பரில் அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று மன்னர் அவரை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டார்.

மன்னரைப்பற்றி ரகசியங்களை ரஷ்ய ஊடகங்களில் வெளியிட்டதால் இந்த விவாகரத்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின் ரிஹானா பிற நபர்களுடன் ரிஹானா நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், அந்தரங்க வீடியோக்கள் டிவி ரியாலிட்டி ஷோவில் வெளியானதை அடுத்தே விவாகரத்து செய்யும் முடிவை மன்னர் எடுத்தார்.

தொடர்ந்த அந்த வீடியோ மன்னர் குடும்பத்தில் புயலை கிளப்பியதால், அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து ரிஹானா ஒக்சனா வியோடினாவை சட்டப்படி விவகாரத்து செய்த சான்றிதழ் இணையதளங்களில் வெளியாகின.

ஆனாலும் ரிஹானா மன்னர்தான் தனது கணவர் என்றும் அந்த திருமணம் பற்றிய நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ரிஹானாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மன்னருடன் திருமணம் நடந்த ஆறு மாதத்தில் குழந்தை பிறந்துள்ளதால், இது பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏனெனில், ரஷ்யாவில் இருக்கும், ஓக்சானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகனின் உடம்பில் மலேசியாவின் ரத்தம் ஓடுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

தான் கடைசி வரை அவருடன் இருக்கவே விரும்புகிறேன். எங்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அந்த குழந்தை தன்னுடையதுதானா என்று வக்கீல் மூலம் மன்னர் மொடல் அழகியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவாகரத்து அளித்த பின்னரும் மொடல் அழகி மன்னருடன் இருந்த புகைப்படங்கள், கர்ப்பகால புகைப்படங்கள், கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டபடி இருந்தார்.

இப்போது மன்னரின் கேள்விக்கு பதில் அளிக்காத ஓக்சனா மீண்டும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய மன்னரின் வக்கீல், ஜூலை 1-ஆம் திகதி சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்டு விட்டது.

அது தொடர்பான சான்றிதழ் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் வசிக்கும் ஓன்சானாவிற்கும் அனுப்பட்டு விட்டது. மன்னரின் மதிப்பையும், மாண்பையும் காப்பது தங்களின் கடமை என்றும் கூறி முடித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்