தோண்ட தோண்ட கைக்குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோரின் உடல்கள்: அதிரவைக்கும் பின்னணி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஈராக்கில் ஓரிடத்தில் பள்ளம் தோண்டும்போது, அங்கிருந்து கைக்குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோரின் உடல்கள் கிடைத்துள்ள நிலையில், அவை சதாம் உசேனால் கொல்லப்பட்ட குர்திஷ் இனத்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்தாதிலிருந்து 200 மைல்கள் தெற்கில், ஈராக்கின் Tal al-Sheikhiya பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த குழியில், 70க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்துள்ளன.

அவர்கள் அனைவரும் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேனால் கொல்லப்பட்ட குர்திஷ் இனத்தவர்கள் என நம்பப்படுகிறது.

அந்த 70 உடல்களில், பிறந்த குழந்தைகள் முதல், 10 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல்களும் அடங்கும்.

இப்போதைக்கு அந்த பகுதியில் மேலோட்டமாக தோண்டும்போதே 70 உடல்கள வரை கிடைத்துள்ள நிலையில், அதே இடத்தில் சற்று ஆழமாக தோண்டினால், மேலும் ஏராளமான உடல்கள் கிடைக்குலாம் என அங்கு ஆய்வு மேற்கொண்டு வரும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், அவை 1988இல் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என தோன்றுகிறது.

அந்த காலகட்டத்தில்தான் சதாம் உசேன், 'Anfal' இனப்படுகொலை என்னும் ஒரு நிகழ்வின் மூலம் கொடூரமாக 180,000பேரைக் கொன்று குவித்தார்.

அப்போது சுமார் 3,000 கிராமங்கள் அழித்தொழிக்கப்பட்டன.

குறிப்பாக பிடிபட்ட பெண்கள் கண்களின் துணி கட்டப்பட்டு தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர்.

1980, 90களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் சதாமின் அராஜக செயல்களால் காணாமல் போன நிலையில், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிய இன்னமும் அவர்களது குடும்பத்தினர் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அப்படி காணாமல் போனவர்கள் குறித்து அறியும் முயற்சியாகத்தான் தற்போது அதிகாரிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்