தூங்கும் போது தினமும் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞர்! சிசிடிவி கமெராவை ஆய்வு செய்தபோது அவர் கண்ட காட்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இளைஞர் ஒருவருக்கு தூங்கும் போது சுவாசிப்பதில் தினமும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சிசிடிவி கமெராவை பொருத்தி அதற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளார்.

நபர் ஒருவர் சமீபகாலமாக இரவில் தூங்கும் அவரால் சரியாக மூச்சு விட முடியாதபடி சுவாசிப்பதில் பிரச்சனை இருந்துள்ளது.

இந்த பிரச்சனை தினமும் தொடர்ந்த நிலையில், தூங்கும் போது தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறிய அவர் விரும்பினார்.

இதையடுத்து சிசிடிவி கமெராவை தனது அறையில் அந்த இளைஞர் பொருத்தினார்.

பின்னர் அடுத்தநாள் காலையில் அதில் பதிவான காட்சிகளை எடுத்து பார்த்த போது அவர் எதிர்பாராத ஒரு விடயம் பதிவாகியிருந்தது.

அதாவது இளைஞர் தூங்கிய பின்னர் தினமும் ஒரு பூனை அவர் அறைக்கு வந்து அவர் முகத்தின் மீது உட்கார்ந்துள்ளது.

இதனால் தான் அவர் தூக்கத்தின் போது சுவாசிக்க திணறியுள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சி புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது 360,000 முறை பகிரப்பட்டதோடு, 1.4 மில்லியன் லைக்குகளை குவித்து வைரலாகியுள்ளது.

அதை தொடர்ந்து பலரும் அந்த புகைப்படம் தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில் இச்சம்பவம் எந்த நாட்டில் நடந்தது என தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்