பாகிஸ்தானில் மட்டும் இத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் இருக்கின்றனரா? அமெரிக்காவில் இம்ரான் சொன்ன அதிரவைக்கும் தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 40 ஆயிரம் தீவிரவாதிகள் தங்கள் நாட்டில் செயல்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த இராணுவ நிதியுதவியை டிரம்ப் நிறுத்தியதால், இரு தரப்பினருக்குமிடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

இவருடன், ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா, ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது ஆகியோரும் சென்றுள்ளனர்.

அப்போது டிரம்பை சந்தித்து பேசிய பின்பு வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை, இம்ரான்கான் சந்தித்து பேசியபோது இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துவது உறுதி செய்துள்ளோம்.

மேலும் அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் கிடையாது.

தாக்குதல் நடத்திய அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் செயல்படுகிறது.

பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கிடையாது. நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக பணியாற்றி வருகிறோம். பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான உண்மையை, முந்தைய பாகிஸ்தான் அரசுகள், கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவிடம் தெரிவிக்கவில்லை.

தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தி வந்தபோது, தம்மை தற்காத்துக் கொள்ளும் போராட்டத்தில் தங்கள் நாடு இருந்தது.

பாகிஸ்தானில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 40 ஆயிரம் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கடுமையான சூழலை எதிர் கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்