நீர்மூழ்கி கப்பல்... முப்படைகள் என மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கிம்: அமெரிக்க பேச்சுவார்த்தை பின் அதிரடி உத்தரவு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வடகொரியா ஜனாதிபதி முப்படைகளின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் சமீபத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், அவர் இந்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த குறித்து வடகொரியா அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், வட கொரிய கடற்படைக்காக புதிதாகக் கட்டப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை அதிபர் கிம் ஜோங்-உன் பார்வையிட்டார்.

அப்போது அவர் இந்த நீர்மூழ்கி கப்பல் தனக்கு மிகவும் திரும்பதி அளிப்பதாகவும், முப்படைகளின் பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கிம் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வட கொரியாவின் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட ஆயத்தமாகி வரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்