மேடையில் பேசும்போதே மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நகைச்சுவை கலைஞர்.. வெளியான அவரின் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் துபாயில் மேடையில் கொமடி செய்து கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்திய தம்பதியினருக்கு பிறந்து, துபாயில் ஸ்டாண்ட் அப் காமெடியான திகழ்ந்தவர் மஞ்சுநாத் நாயுடு (36). இவரின் நகைச்சுவை திறனை பாராட்டி, அவரது ரசிகர்கள் ‘மேங்கோ’ என அன்புடன் அழைத்து வந்தனர்.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடந்த கொமடி கலைஞர்களுக்கான நகைச்சுவை நிகழ்ச்சியில் மஞ்சுநாத் கலந்து கொண்டார்.

இறுதியாக மேடையில் பெர்பார்மன்ஸ் செய்த அவர், மறைந்த தனது பெற்றோரின் கதைகளை கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

தொடர்ந்து ‘கவலையால் ஏற்படும் மனஅழுத்தம்’ பற்றி பாவனையுடன் நகைச்சுவையாக பேசிய அவர், திடீரென மேடையிலிருந்த இருக்கையில் அமர்ந்து மயங்கி சரிந்தார்.

இதனை பார்த்த பார்வையாளர்கள், இது நகைச்சுவையின் ஒரு பகுதி என நினைத்தனர்.

ஆனால் வெகுநேரமாகியும் எழுந்திருக்காததால் அவரது நண்பர் ஒருவர் மஞ்சுநாத்தை எழுப்பியபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

முதலில் மஞ்சுநாத் எப்படி இறந்தார் என தெரியாத நிலையில் பின்னர் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers