புறப்பட தயராக இருந்த விமானம்.. திடீரென நுழைந்த மர்ம மனிதன்: பீதியடைந்த பயணிகளின் வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் புறப்படுவதற்குத் தயாராகி, கேபினுக்குள் செல்ல முயற்சிக்கும்போது நம்பமுடியாத தருணம் மனிதன் ஒரு பயணிகள் ஜெட் விமானத்தின் மீது குதிக்கிறது.

நைஜீரியாவின் பரபரப்பான விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறி, விமானத்திற்கு உள்ள நுழைய முயன்ற மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாகோஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. விமானத்தின் இறக்கை மீது மர்ம நபர் ஒருவன் ஏறுவதை கண்ட விமானத்திற்குள் இருந்த பயணி ஒருவர், அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

மர்ம நபரை கண்டு பீதியடைந்த பயணிகள் விமானத்தை விட்டு வெளியேற முயன்றனர், மேலும் வெளியேறும் கதவுகளைத் திறக்க விமானக் குழு உறுப்பினர்களை அழைத்துள்ளனர். அடையாளம் காணப்படாத மர்ம நபர் அஸ்மான் ஏர் விமானத்தை எவ்வாறு அடைந்தார் அல்லது அவரது நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து அனுமதி பெறக் காத்திருந்த நிலையில், மர்ம நபர் ஓடுபாதையில் விமானத்தை நோக்கிச் சென்றார் என்று நைஜீரியாவின் பெடரல் ஏவியேஷன் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹென்றிட்டா யாகுபு தெரிவித்தார்.

அந்த நபரைக் கண்டதும், விமானத்தின் விமானி வேகத்தை குறைந்து பின்னர் இயந்திரத்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து, அந்த நபர் தொடர்ந்து விமானத்தை சுற்றி ஆராய்ந்துள்ளார். இதனையடுத்து, மர்ம நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து விமானம் ஒரு முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே போர்ட் ஹர்கோர்ட்டுக்கு புறப்பட்டு சென்றதாக யாகுபு கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers