பிரித்தானிய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஏன்? ஈரான் கொடுத்த விளக்கம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிரித்தானியா எண்ணெய் கப்பல் மீன் படகு மீது மோதியதாலே அதனை கைப்பற்றினோம் என ஈரான் விளக்கம் கொடுத்துள்ளது.

பிரித்தானிய நாட்டிற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களை நேற்று ஈரான் கடற்படை அதிகாரிகள் அடுத்தடுத்து கைப்பற்றினர்.

இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெர்மி ஹன்ட் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் பிரித்தானிய கொடியிடப்பட்ட கப்பல் ஸ்டெனா இம்பெரோ, வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்படுவதற்கு முன்பு மீன்பிடி படகுடன் விபத்துக்குள்ளானது என ஈரான் கூறியுள்ளது.

இதுபற்றிய தகவல் கொடுக்கப்பட்ட போதும் பிரித்தானிய கப்பல் அதனை புறக்கணித்துள்ளது. அதன்பிறகே கப்பல் கைப்பற்றப்பட்டது என தெற்கு ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பின் தலைவர் அல்லாஹ்மொராட் அஃபிஃபிபூர் விளக்கம் கொடுத்துள்ளார்.

கப்பலில் பிடிபட்ட 23 பணியாளர்களும் இப்போது பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருப்பதாகவும், விசாரணை முடியும் வரை அவர்கள் கப்பலில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers