239 பேருடன் மாயமான மலேசிய விமானம்.. இப்படி தான் வெடித்து சிதறியது: வெளியான ஆவணப்படம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

239 பேருடன் காணாமல் போன மலேசிய விமானத்தின் மர்மங்களை விளக்கும் வகையில் சேனல் 5 தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மார்ச் 8, 2014 அன்று எம்.எச்.370 மலேசிய விமானம் காணாமல் போனது, அது ஏன் காணாமல் போனது என்பதற்கான ஒரு காரணமாக, 1988 ஆம் ஆண்டு லாக்கர்பி குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத தாக்குதல் நடந்து இருக்கலாம் என்று சேனல் 5-ன் ஆவணப்படம் வெளிப்படுத்தியுள்ளது.

மலேசியா ஏர்லைன்ஸிக்கு சொந்தமான எம்.எச்.370 விமானம் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் 239 பேருடன் காணாமல் போனது, சரியாக என்ன நடந்தது என்பது இன்னும் புதிராகவே உள்ளது.

இதற்கிடையில், டிசம்பர் 21, 1988 அன்று பிராங்பேர்ட்டிலிருந்து டெட்ராய்டுக்கு லண்டன் மற்றும் நியூயார்க் வழியாக பயணித்த பான் ஆம் 103 விமானம் வெடிகுண்டினால் அழிக்கப்பட்டது. N739PA ஸ்காட்லாந்தில் உள்ள லாக்கர்பி மீது தரையில் விழுந்தது. இதில், 243 பயணிகள், 16 பணியாளர்கள் மற்றும் 11 பேர் கொல்லப்பட்டனர்

விமான் எம்.எச்.370 பற்றிய சேனல் 5 இன் ஆவணப்படத்தில் கூறியதாவது, திடீரென ரேடார் தொடர்பின் இழப்பு மற்றும் அபாய எச்சரிக்கை அழைப்பு இல்லாமல் வான்வெளியில் இருந்து விமானம் மாயமானது என எம்.எச்.370, லாக்கர்பி சம்பவங்களுக்கு இடையில் சில ஒற்றுமைகள் காணப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், மலேசிய விமானம் காணாமல் போன சில நாட்களில், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

1988 ஆம் ஆண்டில் லாக்கர்பீ மீது பான் ஆம் 103 விமானம் விழுந்து 270 பேர் கொல்லப்பட்டனர். எம்.எச்.370-யைப் போலவே, எந்தவொரு எச்சரிக்கை அழைப்பும் விடுக்கப்படவில்லை, விமானம் ரேடாரில் இருந்து உடனடியாக மறைந்துவிட்டது.

இருப்பினும், எம்.எச்.370-க்கும் லாக்கர்பி குண்டுவெடிப்புக்கும் இடையிலான ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், N739PA இன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் அது விமானத்தை வீழ்த்தியது குண்டு வெடிப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் எம்.எச்.370-ன் சிதைவுகள் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு லிபிய உளவுத்துறை அதிகாரியான அப்தெல்பசெட் அல்-மெக்ராஹி, லாக்கர்பி குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் என கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers