நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்... பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சவுதிக்கு அழைக்கும் அரசர் சல்மான்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 51 பேரின் உறவினர்களுக்கு சவுதி அரசர் ஹஜ் புனித யாத்திரைக்கான அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி சவுதி அரசரின் விருந்தினர்களாக 200 பேர் ஹஜ் புனித யாத்திரையில் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரசரின் இந்த முடிவுக்கு நியூசிலாந்து பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். உலகம் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி கிறைஸ்டு சர்ச் தீவிரவாத தாக்குதல் நினைவுகளுடன் காலம் தள்ளும் இந்த 200 பேருக்கும் ஹஜ் புனித யாத்திரையில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும்,

இது சல்மான் அரசர் எடுத்துள்ள முடிவு எனவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக நியூசிலாந்து தூதரகத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும், ஆகஸ்டு மாதம் முதல் வாரம் துவங்கும் இந்த ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்கவிருக்கும் இவர்கள் அனைவருக்குமான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்படும் எனவும் அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...