உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட பில்கேட்ஸ்! முதலிடத்தில் யார் தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த பில் கேட்ஸ் மூன்றாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.

புளூம்பெர்க் என்ற நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பட்டியலின்படி, பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளினார் ஜெஃப் பெசோஸ்.

இவர் அமேசானின் நிறுவனர் ஆவார். இதனால் பில் கேட்ஸ் 2வது இடத்திற்கு இறங்கினார். இந்நிலையில், மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், பிரான்ஸை சேர்ந்த LVMH நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பெர்னார்ட் அர்னால்ட் 2வது இடத்தில் இருந்த பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த ஆண்டில் இவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்ததால் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

புளூம்பெர்க் பட்டியலின்படி, ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 125 பில்லியன் அமெரிக்க டொலர்கள், 2வது இடத்தில் உள்ள பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு 108 பில்லியன் டொலர்கள் மற்றும் 3வது இடத்தில் உள்ள பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 107 பில்லியன் டொலர்கள் ஆகும்.

Getty

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்