மோசடி செய்து கிரீன் கார்டு பெற முயன்ற ஜோடி: சரியான நேரத்தில் காட்டிக் கொடுத்த அந்தரங்க குறுஞ்செய்தி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கிரீன் கார்டு பெறுவதற்காக திருமண மோசடி செய்த ஒரு ஜோடி, புலம்பெயர்தல் அலுவலரிடம் மொபைல் போனை காட்டும் நேரத்தில் ஒரு அந்தரங்க செய்தி வந்ததையடுத்து, அவர்களது குட்டு வெளிப்பட்டது.

லைபீரியரான Prince Mark Boley, அமெரிக்க குடிமகளான Amanda Hames-Whitmanஐ மணந்து கொண்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் Boleyக்கு கிரீன் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்காக அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் அலுவலகத்திற்கு இருவரும் சென்றுள்ளனர்.

அப்போது தங்களுக்கிடையேயுள்ள உறவை நிரூபிப்பதற்காக, Boleyயிடமிருந்து தனக்கு வந்த முக்கிய குறுஞ்செய்திகளை அலுவலரிடம் காட்டிக் கொண்டிருந்தார் Amanda. அப்போது ஒரு குறுஞ்செய்தி வர, அதை பார்த்திருக்கிறார் அந்த குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் அலுவலர்.

அதில் Chriss என்பவரிடமிருந்து வந்த ஒரு செய்தி, நாம் பாலுறவு கொண்டது மிகவும் சிறப்பாக இருந்தது என்று கூறியது.

உடனே Amanda, ஒரு மாதத்திற்கு முன் தானும் Chrissம் பாலுறவு கொண்டதாக கூறி சமாளிக்க முயன்றார்.

சந்தேகம் ஏற்படவே, அலுவலர்கள் தொடர்ந்து விசாரிக்க, இருவரும் பதற்றத்துடன் தடுமாறியதுடன், அவர்களால் திருமணம் செய்ததற்கான போதுமான ஆதாரங்களையும் கொடுக்க முடியவில்லை.

எனவே அவர்கள் மேலதிக விசாரணைக்காக USCIS மோசடி தொடர்பான விசாரணை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

பின்னர் Amanda இந்த மோசடிக்காக தனக்கு பணம் எதுவும் தரப்படவில்லை என்றும், Boley ஒரு நல்ல மனிதர் என்பதாலேயே இதைச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து Boley கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஒவ்வொரு குற்றத்திற்காகவும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்