கடற்கரையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த பிரித்தானிய, அவுஸ்திரேலிய பெண்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தாய்லாந்து கடற்கரையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த இளம்பெண்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர்.

திங்கள்கிழமை இரவு தெற்கு தாய்லாந்தின் கிராபி பகுதியில் உள்ள கடற்கரையில் 17 முதல் 20 வயதுக்குட்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிலர் நிர்வாணமாக கடலுக்குள் இறங்கியுள்ளனர்.

இதனை பார்த்து திகைத்துப்போன அப்பகுதியை சேர்ந்த ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அவர்கள் அனைவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய நாட்டவர்கள் என்பது தெரியவந்தது.

பின்னர் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதாக தலா 13 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சம்மந்தப்பட்ட சுற்றுலாப்பயணிகள் அனைவரும் மதுபோதையில் இருந்தனர். திங்கட்கிழமையன்று வேகமாகவே பார்கள் மூடப்பட்டதால் அவர்கள் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபட மாட்டார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்