காணாமல் போன மலேசிய விமானம் விவகாரத்தில் தொடரும் மர்மங்கள்.. அதிகாரிகள் திடுக் தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

மயமான மலேசிய விமானம் எம்.எச்.370 குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள்,கண்டெயினரில் 90 கிலோ பார்சல் கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர், அது விமானப் புறப்பட்ட பிறகே சரக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்

காணாமல் போன மலேசியா விமானத்தில் தனது மனைவி, இரண்டு குழந்தைகளை இழந்த பிரெஞ்சு பொறியியலாளர் கிஸ்லைன் வாட்ரெலோஸ், கடந்த வாரம் பாரிஸில் உள்ள விசாரணை நீதிபதிகளிடம், விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய கூற்றுகளை விவரிக்கும் புதிய அறிக்கையை சமர்ப்பித்தார்

அதில், விமானத்தில் இருந்த கண்டெயினரில் அதிக சுமை இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அது குறித்த எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

மேலும், 90 கிலோ பார்சல் ஒன்று விமானப் புறப்பட்ட பிறகே சரக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏன் யாருக்கும் தெரியாமல் கண்டெயினரில் அதிக சுமை ஏற்றப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நிபுணர்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இது இயலாமை அல்லது மோசடியாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் சாத்தியம் இருக்கிறது. இது மலேசியர்களுக்கான கேள்விகளின் ஒரு பகுதியாக இருக்கும்.

மேலும், விமானத்தின் பயணிகள் பட்டியலின் வெவ்வேறு பதிப்புகள் ஒருவருக்கொருவர் முரண்படுவதாகவும் அவர் கூறினார்.

விபத்து பற்றிய காரணங்களில் விமானத்தில் இருந்த லித்தியம் பேட்டரிகள் அனுப்பப்படுவதிலும் கவனம் செலுத்திப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, என்.என்.ஆர் குளோபல் நிறுவனம், விமானத்தில் 2,453 கிலோ பொருட்களை அனுப்பியதாக தெரியவந்தது, அவற்றில் 221 கிலோ லித்தியம் பேட்டரிகள்.பேட்டரிகள் தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் இந்த விபத்து குறித்த தனது சொந்த விசாரணை மேற்கொண்ட மலேசிய அரசாங்கத்தின் இறுதி அறிக்கையால் இந்த யோசனை மிகவும் சாத்தியமற்றது என்று குறிப்பிடப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...