1000 சிறுத்தைகளை கொடூரமாக வேட்டையாடிய கும்பல்... வெளியான புகைப்படத்தின் அதிரவைக்கும் பின்னணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரேசிலில் அரிய வகை விலங்குகள் என்றழைக்கப்படும் 1000 சிறுத்தைகளை சட்ட விரோதமாக கொலை செய்த கொடூர கும்பலை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

பிரேசிலைச் சேர்ந்த பல் மருத்துவரான Temistocles Barbosa Freire என்பவரே இந்த கொடூர செயலின் மூலக் காரணமாக இருந்துள்ளார் எனவும், இவர் கடந்த 1987-ஆம் ஆண்டிலிருந்தே தன் நண்பர்களுடன் சேர்ந்த மிருகங்களை வேட்டையாடி வந்துள்ளார்.

இவருக்கு விலங்குகளை வேட்டையாடுவதற்கான துப்பாக்கியின் உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கும்பல் அதை சட்ட விரோதமாக அரிய வகை விலங்குகளான சிறுத்தை, காட்டுப்பன்றி, சிவப்பு மான் போன்றவைகளை வேட்டையாடியுள்ளனர்.

இது குறித்த தகவலை அறிந்த வன அதிகாரிகள், அவர்களை கடந்த மூன்று மாதங்களாக கண்காணித்துள்ளனர். அதில் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள், அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்து எல்லாம் கேட்டுள்ளனர்.

அதன் பின்னர் தகுந்த ஆதாரங்களுடன் அவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சில புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் அவர்கள் சிறுத்தையை கொன்றுவிட்டு, அதனுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர்கள் சிறுத்தையை ஈர்ப்பதற்காக இந்த கும்பல் Brazilian friction drum-ஐ பயன்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், முழு விசாரணைக்கு பின்னரே அவர்கள் கொலை செய்த சிறுத்தையை வைத்து என்ன செய்தார்கள் என்பது தெரியவரும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ன அதிகாரிகள் அந்த கும்பலை கண்காணித்துக் கொண்டிருந்த அந்த மூன்று மாதங்களில், அவர்கள் 8 சிறுத்தைகள், 13 கோபி பாராஸ், 10 காட்டுப் பன்றி மற்றும் 2 மான்களை வேட்டையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers