இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை! 2 லட்சம் மக்கள் வெளியேற்றம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் 7.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, 2 லட்சம் மக்கள் உயரமான இடங்களுக்கு தப்பி சென்றுள்ளனர்.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் வடகிழக்கு கடற்கரையில் இன்று 7.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் புவியியல் ஆராய்ச்சி மைய நிறுவனத்தின்படி, 10 கிலோமீட்டர் ஆழத்தில் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை வெளியிட்டதை அடுத்து, டெர்னேட் நகரில் உள்ள 2 லட்சம் மக்கள் உயரமான பகுதிகளுக்கு தப்பியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers