மனைவியரை தோளில் சுமந்தபடி ஓடும் போட்டி: இரண்டாவது ஆண்டும் வெற்றியை குவித்த தம்பதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பின்லாந்து நாட்டில் மனைவியரை தோளில் சுமந்தபடி ஓடும் விநோதப் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டும் லிதுவேனியன் தம்பதி பரிசை அள்ளியுள்ளது.

லிதுவேனியன் தம்பதிகளான வைட்டாடாஸ் கிர்க்லியாஸ்காஸ் மற்றும் அவரது மனைவி நெரிங்கா கிர்க்லியாஸ்கீன் ஆகியவர்களே இரண்டாவது முறையாக வென்றவர்கள்.

இவர்கள் 253.5 மீற்றர் தூரத்தை 1 நிமிடம் மற்றும் 7 நொடிகளில் கடந்துள்ளனர்.

பின்லாந்தில் கடந்த 1992 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த போட்டியில் கணவர்களே தங்களது மனைவியரை, தோளில் சுமந்தபடி, ஓடும் வழியில் வைக்கப்பட்டுள்ள தடைகளைத் தாண்டி ஓட வேண்டும்.

இதில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, போலந்து, பிரித்தானியா, உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான தம்பதியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதில் ஒரு சிலர் இடறிவிழுந்தனர். இந்தப் போட்டியில் லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த தம்பதி சாம்பியன் பட்டத்தை வென்றது.

போட்டியில் வெற்றி‌ பெற்ற தம்பதிக்கு மனைவியின் எடைக்கு நிகரான பீர் வழங்கப்பட்டது.

மனைவியைத் தோளில் சுமந்தபடி ஓடுவது ஒரு சுகமான அனுபவம் என்று கணவன்மார்கள் தெரிவித்துள்ளனர்.

கணவன்கள் தங்கள் வலிமையைக் காட்டுவதற்காகவே மனைவிகளைத் தூக்கிக்கொண்டு ஓடும் இந்த போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers