பார்வையில்லாத மகளை கர்ப்பமாக்கிய தந்தை.. டிஎன்ஏ பரிசோதனை மூலம் வெளியான அதிர்ச்சி உண்மை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

வியட்நாமில் பார்வையில்லாத 14 வயது மகளை கர்ப்பமாக்கி குழந்தை பெற செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாமின் டேம் நொங் மாகாணத்தை சேர்ந்த கணவன், மனைவிக்கு 4 பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை இருந்தனர்.

இதில் மூத்த மகளான 14 வயது சிறுமிக்கு கண்பார்வை கிடையாது, மற்ற நான்கு பேருக்கும் கண்பார்வையில் பிரச்சனை உள்ளது.

இந்நிலையில் குழந்தைகளின் தாய்க்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

இதையடுத்து தந்தை கட்டுப்பாட்டில் குழந்தைகள் வளர்ந்து வந்தனர். இந்த சூழலில் மூத்த மகளை அவர் தந்தை பலமுறை துஷ்பிரயோகம் செய்ததால் அவர் கர்ப்பமானார்.

இதனால் சிறுமியால் பள்ளிக்கு செல்லமுடியவில்லை. பின்னர் பள்ளிக்கூட ஆசிரியர்கள் சிறுமி வீட்டுக்கு வந்து விசாரித்த நிலையிலேயே அனைத்து உண்மைகளும் தெரியவந்தது.

இந்த சூழலில் சிறுமி சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இது தொடர்பாக பொலிசில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொலிசார் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் மகளுக்கு பிறந்த குழந்தைக்கு அவர் தான் தந்தை என்பது உறுதியானது.

பொலிசார் கூறுகையில், சிறுமியின் தாய் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர் அவர் வீட்டருகில் இருந்தவர்கள் அவருக்கு பண உதவி செய்தனர்.

ஆனால் அதில் சிறிதளவு பணம் மட்டுமே அவர் சிகிச்சைக்கு செலவிடப்பட்டது, மீதி பணத்தை அவர் கணவர் மது அருந்துவதற்கும் சூதாடுவதற்கும் பயன்படுத்தியுள்ளார்.

மனைவி மரணத்துக்கு பின்னர் மகளிடம் தவறாக நடந்து கொள்ள தொடங்கியதன் விளைவாகவே அவர் கர்ப்பமானார் என கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்