உலகின் முக்கிய விமானநிலையத்தில் இந்த நாட்டின் பணம் செல்லும்... வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

துபாய் விமான நிலையங்களில் இருக்கும் கடைகளில் ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளன.

துபாய் சர்வதேச விமான நிலையத்திலும், அல் மக்தோயம் விமான நிலையத்திலும் உள்ள கடைகளில் ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்.

இது குறித்து விமானநிலையத்தில் கடை வைத்திருக்கும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ரூபாய் நோட்டுகளை ஏற்கத் தொடங்கிவிட்டோம் என்று கூறியுள்ளார்.

துபாயில் ரூபாயை திர்ஹாமாக மாற்றுவதற்கு கணிசமான தொகையை இந்தியர்கள் இழக்க வேண்டியிருந்தது.

துபை விமான நிலையத்துக்கு கடந்த ஆண்டு 9 கோடி பயணிகள் சென்றனர். அவர்களில் 1.2 கோடி பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

துபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 16ஆவது பணம் ரூபாய்.

ரூபாயை திர்ஹாமாக மாற்றுவதற்கு வசூலிக்கப்படும் வரிகள் மூலம் துபாயில் இந்திய பயணிகளால் அதிக வருவாய் கிடைத்து வந்தது.

அதுமட்டுமின்றி துபாயில் பணிபுரிவர்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களில் இரண்டாவது இடம் வகிப்பது இந்தியர்கள்தான் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துபாயில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பணங்களில் 16-வது ரூபாய் ஆகும்.

விமான நிலையங்கள் ரூபாய் நோட்டுகள் வாங்க துவங்கிவிட்டதாக வெளியான தகவல் மூலம், இந்தியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers