பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்தியர்: இந்த மாதம் சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பு !

Report Print Abisha in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட குல்புஷன்ஜாதவ் வழக்கில் இந்த மாதம் 17ஆம் திகதி சர்வதேச நீதிமன்றம் தீர்பளிக்க உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 2016ஆம் ஆண்டு இந்திய கப்பல்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இந்திய அதிகாரிகள் அவரை சந்திக்க அனுமதிக்கும்படி இந்தியா பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது.

கடந்த 2017ஆம் ஆண்டியில் குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததாகவும், தீவிரவாதத்தை தூண்டியதாகவும் கூறி அவருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின் இந்திய பாகிஸ்தான் இந்த வழக்கில் வியன்னா நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு முடியும் வரை மரணத்தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் வரும் ஜூலை 17ஆம் திகதி இந்த வழக்கின் தீர்ப்பை சர்வதேசநீதிமன்றம் வழங்க உள்ளது. இந்திய நேரப்படி சரியாக மாலை 6.30மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்படும் நீதிபதிகள் அப்துல்காவி மற்றும் அகமது யூசஃப் தீர்ப்பு வழங்க உள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers