வெளிநாட்டு சிறையில் உள்ள இந்தியவர்களின் எண்ணிக்கை வெளியீடு.. எந்த நாட்டில் அதிகமாக உள்ளனர்?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

வெளிநாட்டு சிறைகளில் 8,189 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக இந்தியாவின் வெளியுறவு இணை மந்திரி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் (17வது மக்களவை) கடந்த ஜூன் 17-ம் திகதி தொடங்கியது.

இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய வெளியுறவு இணை மந்திரி முரளிதரன் நேற்று பதிலளித்தார்.

அவர் கூறுகையில், இந்தியா-அமீரகம் இடையே கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கடந்த 2013-ம் ஆண்டுமுதல் அமலுக்கு வந்திருந்தாலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமீரகம் இதுவரை எந்த கைதியையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவில்லை என்றும் முரளிதரன் தெரிவித்தார்.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் உள்ள கடுமையான தனியுரிமை சட்ட விதிமுறைகளால் அந்த நாட்டு சிறையில் உள்ள இந்தியர்கள் பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை.

அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பல்வேறு வெளிநாட்டு சிறைகளில் 8,189 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் வளைகுடா நாடுகளில் மட்டும் 4,206 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

வெளிநாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள இந்தியர்களில், அதிகபட்சமாக 1,811 பேர் சவுதி அரேபியாவிலும், அமீரகத்தில் 1,392 பேரும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்