உலகை உலுக்கிய இரு விமான விபத்துகள்! உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போயிங் விமான நிறுவனம் இழப்பீடு அறிவித்துள்ளது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு கடந்தாண்டு அக்டோபர் மாதம் விமானம் ஒன்று புறப்பட்டது.

புறப்பட்ட 13-வது நிமிடத்தில் அந்த விமானம் திடீரென மாயமாகி கடலில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர்.

அதே போல இந்தாண்டு மார்ச் மாதம் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், 8 விமான பணியாளர்கள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்த இரு விபத்தையும் ஏற்படுத்திய விமானத்தை தயாரித்த நிறுவனம் போயிங் விமான நிறுவனம்.

இந்த விபத்துக்களில் மொத்தமாக 346 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீடு அறிவித்துள்ளது போயிங் விமான நிறுவனம்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் படிப்பு மற்றும் மற்ற செலவுகளுக்கு அளிக்கப்படும் என்று போயிங் தெரிவித்துள்ளது.

ஆனால், இதனை ஏற்க பாதிக்கப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.

இந்த இரு விமான விபத்துகளை தொடர்ந்து 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்குவது உலகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்