நடுக்கடலில் கப்பல் விபத்து: 26 பேர் பலி... 47 பேர் மீட்பு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஹோண்டுராஸின் அட்லாண்டிக் கடற்கரையில் ஒரு இரால் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோண்டுரான் ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஹோண்டுராஸ் நாட்டை சேர்ந்த மீனவர்கள் 73 பேர் கேப்டன் வாலி என்கிற கப்பலில் 1ம் திகதி முதல் மீன் பிடித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென அவர்களுடைய கப்பல் புவேர்ட்டோ லெம்பிரா பகுதிக்கு அருகே விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நாற்பத்தேழு பேர் மீட்கப்பட்டதாகவும் ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் டொமிங்கோ மீசா தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கிய அனைவரும் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்