ஈரான் அமெரிக்க இடையே போர் மூண்டால் உலக நாடுகளில் அனைத்து மக்களையும் பாதிக்கும்...!

Report Print Abisha in ஏனைய நாடுகள்

ஈரான் அமெரிக்க இடையே போர் ஏற்பட்டால் உலக நாடுகளில் என்ன பிரச்சனை எழும் என்று தெரிந்து கொள்வோம்

ஹர்முஸ் ஜலசந்திதான் உலகின் மிக முக்கிய நீர்வழி பாதையாக செயல்படுகின்றது.

இங்கு என்ன நடந்தாலும் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும் மற்றும் உலக பொருளாதார மாற்றம் ஏற்படும்.

முன்னதாக ஈரானின் அணுஆயுத ஒப்பந்ததின் போது இந்த இடம் நிலையற்று போனது.

அதற்கு அமெரிக்க ஈரானை பார்த்து அவரகள் தீவிரவாத தேசம் என்றும், அமெரிக்க இது போன்ற செயல்களுக்கு அனுமதிக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவை நம்பாதீர்கள் அவர்களை நம்ப வேண்டாம் என்று ஈரான் பதிலடி கொடுத்தது.

அமெரிக்க மீதாக பொருளாதார தடையை அமெரிக்க இன்றும் கடுமையாக்கியது, மேலும் எண்ணை ஏற்றுமதியில் கடும் அழுத்ததை கொடுத்துள்ளது.

1980-களில் முன்னதாக ஈரான், ஈராக் போரின்போது ஹர்முஸ் ஜலசந்தி பகுதி மிகவும் சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வந்தது

இந்நிலையில் அப்பகுதியில் இருந்த அமெரிக்க கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று சவுதி அரேபியாவிக் ஐ.நா தூதர் தெரிவித்தார்.

கப்பல்களை தாக்கும் வேலை ஈரானுடையதாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க தெரிவித்துள்ளது. ஆனால் ஈரான் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் இது எவ்வாறு உலக மக்களை பாதிக்கும்?

இதற்கு ஆசிய, ஐரோப்ப, வடஅமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளுக்கு தொடர்பு உள்ளது. மத்திய கிழக்கிற்கும் இந்த ஜலசந்திக்கும் எண்ணை வணிகத்தில் மிக முக்கிய பங்கு உண்டு.

உலகில் எண்ணை ஏற்றுமதி செய்வதில் ஐந்தில் ஒருபகுதி இந்த வழியாகதான் ஏற்றி செல்லப்படுகின்றது.

ஈரான் அதிபர், அமெரிக்க எண்ணை ஏற்றுமதியை தடை செய்தால் பின் வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணை பெற இயலாது என்று அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்க போர் தொடுக்க முற்படுமானால், ஜலசந்தி வழியாக ஈரான் எண்ணை எடுத்து செல்ல நிச்சயம் அனுமதிக்காது. இதனால் உலக நாடுகளில் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் விலை கடுமையாக உயரும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers