தாயின் கண்முன்னே 4வது மாடியிலிருந்து தடுமாறிய ஒரு வயது குழந்தை: அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொலம்பியா நாட்டில் 4வது மாடியில் இருந்து தவறிய குழந்தையை அதிர்ஷ்டவசமாக அவருடைய தாய் காப்பாற்றியுள்ளார்.

கொலம்பியா நாட்டின் மேடெல்ளின் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தாய் ஒருவர் லிப்ட் மூலமாக 4வது தளத்தில் அமைந்திருக்கும் தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். செல்போன் பேசுவதில் அவர் பிசியாக இருந்த சமயத்தில், அவருடைய ஒரு வயது மகன் விளையாடிக்கொண்டே, லிப்ட் பக்கத்தில் உள்ள பால்கனிக்கு செல்கிறான்.

அருகாமையில் சென்ற அந்த குழந்தை திடீரென கீழே தவறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த தாய் உடனடியாக குழந்தையின் கால்களை லாவகமாக பிடித்துக்கொண்டார்.

மறுபுறம் தவறிய குழந்தையை பிடிப்பதற்காக காவலாளி வேகமாக கீழ் பகுதிக்கு சென்றார். ஆனால் அந்த தாய் கச்சிதமாக பிடித்துக்கொண்டதால், அவருடைய கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், ஓடிவந்து உதவினர்.

இதுகுறித்து அந்த கட்டிடத்தின் மேலாளர் கூறுகையில், இந்த சம்பவத்தில் குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. குழந்தையின் தாய்க்கு தான் நன்றி செலுத்த வேண்டும். அவர் கெட்டியாக குழந்தையை பிடித்ததால் தான் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers