வினோதமான மார்பக நோயால் நடக்க கூட முடியாமல் அவஸ்தையடையும் பெண்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தாய்லாந்து பெண் ஒருவரின் மார்பகங்கள் அசாதாரணமாக வளர்ந்துகொண்டே செல்வதால், தினசரி வேலைகளை கூட செய்ய முடியாமல் பெரும் அவஸ்தையடைந்து வருகிறார்.

தாய்லாந்தை சேர்ந்த லா ப்ராய் (46) என்கிற பெண்ணின் மார்பகங்கள் கடந்த 9 மாதங்களுக்கு முன் திடீரென பெரிதாக வளர ஆரம்பித்துள்ளது.

அவரது பிரம்மாண்டமான மார்பின் காரணமாக கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுவலி போன்றவற்றால் பெரும் துயரப்பட்டு வருகிறார். ஊன்றுகோல் இல்லாமல் அவரால நடக்க கூட இயலாது.

என்ன காரணத்திற்காக வளர்கிறது என்பது தெரியாமல் மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உள்ளூர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் படி, அவருக்கு புற்றுநோய் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

இருந்தாலும் வருகின்ற ஜூலை 19ம் திகதியன்று முழுப்பரிசோதனைக்கு செல்லவிருக்கிறார். ஆனால் அவருடைய கணவருக்கு வேலை எதுவும் இல்லாத காரணத்தால் பொதுமக்களிடம் பண உதவி கேட்டு வருகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்