சவுதி பத்திரிகையாளர் கொலைக்கு சவுதி இளவரசர்தான் காரணம்: நம்பத்தகுந்த ஆதாரம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொலைக்கு சவுதி இளவரசர்தான் பொறுப்பு என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் நிபுணரான விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சிறப்பு விசாரணை அதிகாரியான Agnes Callamard, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்தான் குற்றத்திற்கு பொறுப்பு என்பதற்கான படிநிலைகளை நிரூபிப்பதற்காக, பாரபட்சமற்ற, சர்வதேச விசாரணை ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள தனது முதல் விசாரணை அறிக்கையில், இளவரசரோடு, மற்ற உயர் நிலையில் இருக்கும் சவுதி அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சொல்லப்போனால், இளவரசருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து நன்கறிந்திருந்த பத்திரிகையாளர் ஜமால், அவருக்கு பயந்திருந்ததற்கான ஆதாரத்தை தான் கண்டுபிடித்ததாகவும் Callamard தெரிவித்துள்ளார்.

சவுதி பத்திரிகையாளரும் இளவரசரை விமர்சிப்பவருமான ஜமால், அக்டோபர் மாதம் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். தனது ஏஜண்டுகள்தான் ஜமாலை கொன்றதாக சவுதி ஒப்புக்கொண்டாலும், அது குறித்து இளவரசருக்கு எதுவும் தெரியாது என்றே மறுத்து வந்தது.

ஜமால் கொலை தொடர்பாக 11 பேர் சிறையிலடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது.

தனது அறிக்கையில், சவுதியும் துருக்கியும் தங்கள் விசாரணையில் சட்டவிரோத உயிரிழப்புகள் தொடர்பான சர்வதேச தரநிலைகளை சந்திக்க தவறிவிட்டதை கண்டறிந்துள்ளதாகவும் Callamard தெரிவித்துள்ளார்.

தூதரகத்தினுள் ஜமால் கொல்லப்பட்டது தொடர்பான CCTV காட்சிகளை தானே பார்த்ததாக தெரிவித்துள்ள Callamard, ஐ.நா செக்ரட்டரி ஜெனரல் Antonio Guterresஐயும், அமெரிக்காவின் FBIயையும் களத்தில் இறங்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்