ஆளரவமற்ற வீட்டில் கிடந்த இளம்பெண்ணின் உடல், சிறுவர்கள் கைது: விபரீத பின்னணி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சாத்தான் வணக்கம் செய்யும் சிறுவன் ஒருவனும் அவனது தோழனும் சேர்ந்து இளம்பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உள்ளாக்கி சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சமீபத்தில் பிரித்தானியாவில் அலீஷா என்ற சிறுமி இதேபோல் உடல் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட காயங்களுடன் வன்புணர்வுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டதும், கொலை செய்தவன் சிறுவன் என்றாலும், அவனது கோர செயலுக்காக வழக்கத்தை மீறி அவனது பெயர் வெளியிடப்பட்டதும் நினைவிருக்கலாம்.

தற்போது அயர்லாந்தில் ஒரு இளம்பெண் அதேபோல் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். அயர்லாந்திலுள்ள Lucan என்னும் கிராமத்தைச் சேர்ந்த Ana Kriegel (14) என்னும் பெண் ஒருநாள் காணாமல் போனாள்.

பொலிசார் அவளை தீவிரமாக தேடி வந்த நிலையில், மூன்று நாட்களுக்குப்பின் Anaவின் உடல், ஆளரவமற்ற ஒரு வீட்டில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவளது கழுத்தில் டேப் ஒன்று சுற்றப்பட்டிருந்தது.

அவளது உடலை உடற்கூறு பரிசோதனை செய்த மருத்துவர், அவளது உடலில் 50 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், கழுத்திலும் தலையிலும் ஏதோ ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் அந்த பெண் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின் பொலிசார் அதே ஊரைச் சேர்ந்த இரண்டு 14 வயது சிறுவர்களைக் கைது செய்துள்ளனர்.

ஒரு சிறுவன் Anaவை ஏமாற்றி ஆளரவமற்ற ஒரு வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கு ஏற்கனவே காத்திருந்த மற்றொரு சிறுவன் அவளை பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறான்.

அவன் அவளை சித்திரவதை செய்து, வன்புணர்வு செய்வதைக் கண்டதும் தான் அங்கிருந்து ஓடி விட்டதாக அந்த முதல் சிறுவன் கூறியுள்ளான்.

Anaவின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சித்திரவதை செய்ய பயன்படும் இரு புறமும் கூர்மையான ஆணி பதித்த ஒரு மரக்கட்டையும், இரத்தம் தோய்ந்த Anaவின் உள்ளாடைகளும் கண்டெடுக்கப்பட்டன.

அந்த சிறுவர்கள் இருவரையும் கைது செய்துள்ள பொலிசார் , அவர்களை காவலில் அடைத்துள்ளனர்.

அவர்கள் வீடுகளை சோதனையிட்டதில் கொலை செய்தவனின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து பார்க்கும்போது, அவன் சாத்தான் வணக்கம் செய்பவன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்