வடகொரியா ஜனாதிபதி பற்றிய மர்மம்... உலகநாடுகளை திரும்பி பார்க்க வைத்த சில முடிவுகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
202Shares

வடகொரியாவையே அடக்கி ஆளும் ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம்.

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து, உலக நாடுகளுக்கு அதிரச்சி கொடுத்து வந்தது. வடகொரியாவின் இந்த செயலால் அமெரிக்கா-வடகொரியாவிற்கிடையே பனிப்போர் நிலவியது,

அதுமட்டுமின்றி கொரிய தீபகற்பகத்தில் போர்பதற்ற நிலவியது. அதன் பின் வடகொரியா மீது பொருளாதாரா தடை கிம் ஜாங் உன் மற்றும் டிரம்ப் சந்திப்பு ஆகியவற்றால் இந்த பதற்றமான சூழ்நிலை தணிந்தது.

இதையடுத்து மீண்டும் டிரம்ப்-கிம் பேச்சுவார்த்தை வியட்நாமில் நடைபெற்றது, ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய, இரு நாடுகளுக்கிடையேயான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, கிம் ஜெனரல் ஒருவரை மீன்களுக்கு இரையாக்கி கொடூரமான மரணதண்டனை கொடுத்து உலகநாடுகளை திரும்பி பார்க்க வைத்தார். இப்படி ஏதாவது செய்து உலகநாடுகளை தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் கிம் கொடூர முகம் ஒரு பக்கம் இருந்தாலும், அவரைப் பற்றி சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.

கிம் ஜாங்கின் வயது ஒரு மர்மம்

இத்தனை ஆண்டுகள் கழிந்த போதும், கிம் ஜாங்கின் உண்மையான வயது என்ன என்பது மர்மமாகவே உள்ளது. ஏனெனில் அவர் 1983 அல்லது 1984-ல் பிறந்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால் உறுதியான தகவல் இல்லை. அதே சமயம் அமெரிக்கவின் (US Treasury Department) இவர் ஜனவரி 8-ஆம் திகதி 1984-ஆம் ஆண்டு பிறந்தார் என்று கூறுகிறது.

சீஸ் விரும்பி

கிம் ஒரு சீஸ் விரும்பி என்றே கூட கூறலாம். அதிலும் குறிப்பாக இவருக்கு சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்படும் Emmental cheese-க்கு அடிமை. சீஸ் உணவுகளை அதிக எடுத்து கொண்டதன் காரணமாகவே இவரது உடல் எடை அதிகரித்தது.

தூங்கியதற்காக தூக்குதண்டனை

இராணுவ நிகழ்ச்சி ஒன்றில் மந்திரி ஒருவர் தூங்கியதற்காக, நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.

எந்த நாட்டிற்கு சென்றாலும்

கிம் பொதுவாக எந்த நாட்டிற்கு சென்றாலும் சொந்தமான கழிப்பறையை பயன்படுத்துகிறார். அதுமட்டுமின்றி உணவு முறைகளிலும் அதிக கட்டுப்பாடு கொண்டிருப்பவர், குறிப்பாக வெளிநாட்டு பயணத்தின் போது.

முடியைப் பற்றி அதிரடி உத்தரவு

இந்த உத்தரவு தான் அப்போது ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஆண்கள் 2 செ.மீற்றருக்கு மேல் முடி வளர்க்க கூடாது. சைடு முழுவதும் சுத்தமாக இருக்க வேண்டும். மேற்பரப்பில் முடி இருக்க வேண்டும். ஆனால் நடிகர்களுக்கு இந்த உத்தரவு கிடையாது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்