வீடியோ கேம் விளையாட தடை செய்த தந்தை: மகன் செய்த விபரீத செயல்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

வீடியோ கேமுக்கு அடிமையான ஒருவரை, அவரது தந்தை விளையாட விடாமல் தடுத்ததற்காக, அவர், குடிக்கும் தண்ணீரில் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த Sak Duanjan (29), ஒரு நாள் நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மொபைல் போனை சத்தமாக வைத்து கேம் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

தூங்க முடியாமல் தவித்த அவரது பெற்றோர், எவ்வளவு சொல்லியும் Duanjan கேட்காமல் போகவே, அவரது தந்தையான Chakri Khamruang (52), எழுந்து வை ஃபை இணைப்பை துண்டித்து விட்டு சென்றிருக்கிறார்.

இருவரும் மாறி மாறி திட்டிக் கொள்ள, வீட்டிலுள்ள பொருட்களை தூக்கி வீசியெறிந்து கலாட்டா செய்திருக்கிறார் Chakri.

பிறகு ஒரு வழியாக எல்லோரும் தூங்கப்போக, அத்துடன் பிரச்சினை முடிந்தது என்று எண்ணியிருக்கிறார் Duanjan.

ஆனால் மறுநாள் காலை சமைப்பதற்காக கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற Chakriயின் தாய் Suban (51), கிணற்றில் ஏதோ மிதப்பதைக் கண்டு அது என்ன என்று பார்க்க, அது விஷம் என தெரியவந்திருக்கிறது.

தனது சொந்த மகனே தங்களை விஷம் வைத்துக் கொல்ல முயன்றதை அறிந்து அதிர்ந்து போன Suban, கணவரிடம் நடந்ததை தெரிவித்திருக்கிறார்.

இனி எப்போது என்ன நடக்கும், எப்போது Chakriயால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரியாத நிலையில், அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர் பெற்றோர்.

Chakriயை மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு அதிகாரிகள் சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் தாங்கள் விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்