அதிர்ந்த அறைகள் .... பதறி அடித்து ஓடிய மக்கள்! 6மணி நேரத்தில் இது இரண்டு முறை

Report Print Abisha in ஏனைய நாடுகள்

சீனாவில் 6 மணி நேர இடைவெளியில் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்றிரவு 10.55 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கடியில் சுமார் 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் இந்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். இதில் 12பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இன்று அதிகாலை 5 மணியளவில், அதேபகுதியில் 5.3 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தின் அறையினுள் உணரப்பட்ட அதிர்வு குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்