உலகக்கோப்பையில் இந்தியாவின் வெற்றி... அமித் ஷாவின் பேச்சுக்கு பாகிஸ்தான் பதிலடி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், அமித் ஷாவின் கருத்துக்கு பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 16-ஆம் திகதி உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின, இப்போட்டியில் இந்திய அணி அசால்ட்டாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்திய அணி பாகிஸ்தான் மீது நடத்திய மற்றுமொரு தாக்குதல். முடிவு ஒன்றுதான்.

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒட்டுமொத்த இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்தியர்கள் அனைவரும் உங்கள் வெற்றியை கொண்டாடுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப்கபூர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கிரிக்கெட் வெற்றி வேறு, வான்வெளி தாக்குதல் வேறு என்று குறிப்பிட்ட அவர் சந்தேகமாக இருந்தால் கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் திகதி என்ன நடந்தது என்று பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்