திருமண உறவுக்கு வெளியில் பிறந்த குழந்தை: மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி எறிந்த தாய்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

திருமண உறவுக்கு வெளியில் பிறந்த குழந்தையை ஒரு பெண் மூன்றாவது மாடியிலிருந்து வீசியெறிய, இன்னொரு பெண் எதையும் குறித்து கவலைப்படாமல் அந்த குழந்தையை காப்பாற்றியிருக்கிறார்.

சீனாவில் Fu என்ற 22 வயது பெண், திருமண உறவுக்கு வெளியில் பிறந்த தனது குழந்தையை, தொப்புள் கொடியை தானே வெட்டி விட்டு, ஜன்னல் வழியாக தூக்கியெறிந்திருக்கிறார்.

குழந்தை அழும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தவர்கள் மூன்றாவது மாடியிலிருந்து வீசியெறியப்பட்ட அந்த குழந்தை இன்னொரு பால்கனியில் விழுந்துகிடப்பதைக் கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பொலிசார் வருவதற்குள் அந்த குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஒருவரிடம் ஏணி ஒன்றைக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்கள் சிலர்.

ஒரு பெண் விறுவிறுவென்று ஏணியில் ஏறி அந்த குழந்தையை மார்போடு அணைத்து தூக்கிக் கொண்டு இறங்கியிருக்கிறார்.

வெளியாகியுள்ள வீடியோவில் அந்த குழந்தையை காப்பாற்றிய பெண் அதை ஒரு டவலில் சுற்றி பத்திரமாக வைத்திருப்பதைக் காணலாம்.

அதற்குள் பொலிசார் வர, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

மருத்துவர் அந்த குழந்தையை மீட்ட பெண்ணிடம், நீங்கள் கையில் கிளவுஸ் எதுவும் போடவில்லை, முழுவதும் இரத்தத்தில் கிடந்த அந்த குழந்தையை தூக்கியிருக்கிறீர்களே, ஹெச்.ஐ.வி ஏதாவது வந்து விடும் என்று உங்களுக்கு பயம் ஏற்படவில்லையா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர், நான் அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன், ஹெச்.ஐ.வி பற்றியெல்லாம் நினைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். தற்போது அந்த குழந்தை நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அந்த பெண்ணே கூறியுள்ளார்.

இதற்கிடையில், அந்த குழந்தையின் தாயாகிய Fu என்ற அந்த பெண்ணை, பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers