ஒரே ஆண்டில் 85 கப்பல்கள் மாயமான கடற்பகுதி... 11 நாட்கள் சிக்கித்தவித்த மீனவர்: மீண்டு வந்தது எப்படி?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஆசியாவின் பெர்முடா முக்கோணம் என அறியப்படும் மிக ஆபத்தான கடற்பகுதியில் மீனவர் ஒருவர் 11 நாட்கள் சிக்கித்தவித்து, பின்னர் மீண்டு வந்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

சீனா மீனவரான 52 வயது Nian Xinghua என்பவரே கடந்த மே மாதம் மீன் பிடிக்க சென்ற நிலையில் கடலில் சிக்கியுள்ளார்.

மேலும் தனது சிறுநீரை குடித்து 11 நாட்களும் உதவிக்கு போராடியுள்ளார். இந்த நிலையில் அந்த பகுதி வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று இவரை காப்பாற்றி கரை சேர்த்துள்ளது.

36 ஆண்டுகளாக மீன் பிடித்தொழிலை செய்துவரும் Nian Xinghua மே மாதம் 23 ஆம் திகதி தமது குடும்பத்துடன் ஒன்றிணைந்தார்.

Nian Xinghua மாயமான நிலையில், அவரது இறுதிச்சடங்குகளுக்கு குடும்பத்தினர் தயாரானதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று பிங்டான் பிராந்தியம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அப்பகுதி எங்கும் மூடுபனி சூழ்ந்துள்ளது.

அந்த நேரம் அவரது மொபைல் போனும் வேலை செய்யவில்லை. கரைக்கு திரும்பலாம் என்றிருந்த நிலையில், எரிபொருள் காலியானது தெரியவந்துள்ளது.

செய்வதறியாது தவித்த அந்த மீனவர், கடலில் தனியாக தத்தளித்துள்ளார். ஒருகட்டத்தில் ஆசியாவின் பெர்முடா முக்கோணம் என அறியப்படும் பகுதியின் அருகாமையில் அவரது படகு நெருங்கியதை அவர் உணர்ந்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு முதன்முறையாக தைவான் நிபுணர்களால் இப்பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

இப்பகுதியில் இதுவரை பல ராணுவ விமானங்களும் கப்பல்களும் விபத்தில் சிக்கி மாயமாகியுள்ளன.

2016 ஆம் ஆண்டு மட்டும் 85 சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்கள் இப்பகுதியில் மாயமாகியுள்ளன. இதனையடுத்தே இப்பகுதியை ஆசியாவின் பெர்முடா முக்கோணம் என குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த ஆபத்தான முக்கோணமானது சீனா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

கடலில் சிக்கிய இரண்டாவது நாளே, குடிநீர் காலியானதாக கூறும் அந்த மீனவர், பின்னர் தனது சிறுநீரையை பயன்படுத்தியுள்ளார்.

உணவுக்காக, மீன்களுக்கு இரையாக பயன்படுத்தும் புழுக்களை எடுத்துக்கொண்டுள்ளார்.

கடலில் சிக்கித்தவித்த அந்த 11 நாட்களும் தூங்கவே இல்லை எனவும், அந்த வழியாக செல்லும் கப்பல் ஏதேனும் உதவாதா என்பதை முழிப்புடன் இருந்து தேடியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்