தப்பிய 14 சிங்கங்களிடமிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலருக்கு யானையால் ஏற்பட்ட பரிதாபம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்க வன விலங்குகள் பூங்காவிலிருந்து தப்பிய 14 சிங்கங்களிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் ஒருவர், யானை ஒன்றினால் கொல்லப்பட்டார்.

Kruger வன விலங்குகள் பூங்காவிலிருந்து 14 சிங்கங்கள் தப்பிய விடயம் பலரும் அறிந்ததே.

இந்நிலையில் அருகாமையில் வசிக்கும் மக்களை அந்த சிங்கங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக Eric Kgatla (45) என்னும் பாதுகாவலரும் அவரது நண்பரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அங்கு பாஸ்பேட் சுரங்கம் ஒன்று உள்ளதால் அங்குள்ள மக்களுக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாது என்பதற்காக இருவரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யானை ஒன்று பயங்கரமாக பிளிறும் சத்தம் கேட்டு Ericஐ எச்சரிப்பதற்காக அவரைத் தேடிச் சென்றுள்ளார் அவரது நண்பர்.

அவரைக் காணாமல் அங்கும் இங்கும் அலையும்போது காலில் ஏதோ தட்டுப்பட, அது என்று பார்த்தபோது தனது நண்பர் Eric பிணமாக கிடப்பதைக் கண்டுள்ளார் அவர்.

ஏற்கனவே அந்த யானை Ericஐ மிதித்து கொன்று விட்டு அங்கிருந்து சென்றுவிட்டிருக்கிறது.

அவர் உடனடியாக அவசர உதவியை அழைக்க, விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர், Eric ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். சிங்கங்களிடம் இருந்த மற்றவர்களைக் காக்கும் பணியில் தனது உயிரையே தியாகம் செய்துள்ளார் Eric.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்