ஒரே இனத்தைச் சேர்ந்த 100 பேர் படுகொலை.. என்ன நடக்கிறது மாலி நாட்டில்

Report Print Basu in ஏனைய நாடுகள்

மேற்கு ஆப்பரிக்கா நாடான மாலியில் குறிப்பிட்ட இனத்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

மொப்தி பிராந்தியத்தில் சங்கா நகருக்கு அருகே ஸோபலே கேவ் கிராமத்திலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், கிட்டதட்ட 100 பேர் உயிரிழந்துள்ளதாக மாலியின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

டோகோன் இன குழுவினர் வசித்து வரும் பகுதியை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாலி நாட்டில் டோகோன் மற்றும் பியூலானி சமூகத்தினரிடையே தொடர் மோதல்கள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய மாதங்களில் மாலியில் ஏராளமான தாக்குதல்கள் நடந்தப்பட்டுள்ளன. சில தாக்குதல்கள் இன குழுக்களாலும், சில ஜிகாதி குழுக்களால் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இதே பகுதியில், பியூலானி கிராமத்தில் தாக்குதல் நடத்திய டோகோன் தாக்குதல்தாரிகள் 134 பேரை கொன்று குவித்தனர். அதற்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்திப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers