திருமண உணவு விருந்தின் போது திடீரென கழிப்பறைக்கு எழுந்து சென்ற மணப்பெண்... அதன்பின்னர் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

திருமணத்தின் போது மணமகளிடம் அவர் நாத்தனார் நடந்து கொண்ட விதம் அவரை மிகவும் கோபமடைய செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் விருந்து பரிமாறப்பட்ட நிலையில் அனைவருடனும் மணமகனும், மணப்பெண்ணும் சாப்பிட உட்கார்ந்தனர்.

மணப்பெண் சாப்பிட தொடங்கிய நிலையில் கழிப்பறைக்கு எழுந்து சென்றார்.

பின்னர் எட்டு நிமிடங்கள் கழித்து அவர் சாப்பிடும் இடத்துக்கு வந்தபோது அனைவரும் அவரை பார்த்து சிரித்தார்கள்.

பின்னர் தனது சாப்பாடு தட்டு காலியாக இருப்பதும் அதில் இருந்த உணவை கணவரின் சகோதரியான தனது நாத்தனார் சாப்பிட்டதும் மணப்பெண்ணுக்கு தெரியவந்தது.

இதனால் கோபமடைந்த மணப்பெண் ஏன் இப்படி செய்திர்கள் என கத்தினார்.

அதற்கு அவர் நாத்தனார், நீங்கள் டயட்டில் இருப்பீர்கள் என நினைத்து தான் உங்கள் உணவை சாப்பிட்டேன் என கூறினார்.

இதையடுத்து தனது கணவரிடம், உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து திருமண விருந்தை நான் தானே சாப்பிட வேண்டும், ஏன் உங்கள் சகோதரியை உட்கார அனுமதித்தீர்கள் என கேட்க அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை.

இதன் பின்னர் திருமணம் நடந்த நாளன்றே கணவருடன் அவர் சண்டை போட்டுள்ளார். இது இருவருக்குளும் மனஸ்தாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இருவரையும் குடும்பத்தார் சமாதானப்படுத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற நாடு குறித்த விபரம் தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers