கிம் ஜாங்கின் இன்னொரு முகம்.... வடகொரியாவில் இராணுவ ஜெனரலுக்கு கொடூரமான மரண தண்டனை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இராணுவ புரட்சி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சிக்கிய ராணுவ ஜெனரலை, வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் பிரானா மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஒரு சர்வாதிகாரி எனவும், தனக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அவர்களுக்கு உடனடியாக மரணதண்டனை கொடுத்துவிடுவார் என்ற செய்தி பலருக்கும் தெரிந்திருக்கும்.

இந்நிலையில் அவர் தற்போது கொடூரமான மரணதண்டனை ஒன்றை கொடுத்திருப்பதாக பிரித்தானியாவின் உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ புரட்சி நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், வடகொரிய ராணுவ ஜெனரல் ஒருவருக்கே கிம் ஜோங் உன் இப்படி ஒரு மரண தண்டனையை கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த ஜெனரலின் பெயர் வெளியிடப்படவில்லை. முதலில் கை, உடல் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட அவரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி உள்ளார் கிம்.

பியாங்க்கில் உள்ள தனது வீட்டில் கிம் வைத்திருக்கும் பிரமாண்டமான பிரானா மீன் தொட்டியில் அவரை தூக்கி போட்டுள்ளார். அதிலிருந்த நூற்றுக்கணக்கான பிரானா மீன்கள், அவரது உடலை கடித்து குதறி சாப்பிட்டுள்ளன.

பிரானா மீன்கள்

இந்த மீன்கள் மிகவும் மூர்க்கமானவை, இரும்பு போன்ற பற்களை கொண்ட அவை சக மீன்கள், பறவைகள், மனித தசைகளையும் விரும்பி சாப்பிடக்கூடியவை என்று கூறப்படுகிறது.

இரும்பு தகட்டையே கடித்து தூள்தூளாக்கும் வலுவான பற்களை கொண்ட பிரானாக்கள், மனித உடலை கடித்து குதற வெகுநேரம் ஆகாது.

தந்தையிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை பெற்ற பிறகு கிம் ஜோங் உன், இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேருக்கு மரணதண்டனை கொடுத்துள்ளார்.

இதற்கு முன், பீரங்கிகளை தகர்க்க பயன்படுத்தும் துப்பாக்கி குண்டு மூலமும், தீயை கக்கும் துப்பாக்கிகள் மூலமும் சுட்டுக் கொடூர சம்பவங்களை நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 1965-ஆம் ஆண்டில் வெளியான யு ஒன்லி லிவ் டுவைஸ் என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வில்லன் தனது உதவியாளரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்யும் காட்சிகள் உள்ளன.

அந்த தண்டனை பிடித்துப் போனதால், கிம் ஜோங் உன்னும் அதே போல தண்டனையை நிகழ்த்தியிருக்கலாம் என பிரித்தானியா உளவுப்படையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers