வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இந்தியர்கள்... ரத்தமும் சதையுமாக இருந்ததாக கதறும் உயிர் தப்பிய நபர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரம்ஜான் பண்டியை கொண்டாட ஓமனில் இருந்து துபாய் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் பரிதாபமாக இறந்த நிலையில், இந்த சம்பவத்தை நேரில் கண்ட நபர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக 31 பயணிகளை ஏற்றிக்கொண்டு துபாய் நோக்கி கடந்த 6-ஆம் திகதி பேருந்து ஒன்று சென்றது.

அப்போது பேருந்து மாலை உள்ளூர் நேரப்படி 6 மணியளவில் அல் ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் இந்தியர்கள் 12 பேர் உட்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பேருந்து செல்ல தடைவிதிக்கப்பட்ட சாலையில் அனுமதிக்கப்பட்டதைவிட, அதிகமான வேகம் ஆகியவையே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விபத்தில் தப்பிய நிதின் லாஜி என்பவர் கூறுகையில், இடது பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் பலர் இதில் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்களைப் பேருந்துக்குள் நாங்கள் மீட்க முயன்றோம். அதில் ஒரு பெண் காயத்தினால் வலி தாங்க முடியாமல் கத்தினார்.

என்னிடம் உதவி கோரினார். அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. விபத்தில் அவரது கணவர் உயிரிழந்துவிட்டார். பேருந்து முழுவதும் ரத்தமும் சதையுமாக இருந்தது. நான் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த விக்ரம் தாக்கூர், தனது மனைவி மனிஷாவுடன் ஓமன் செல்ல திட்டமிட்டுள்ளார். கடைசி நேரத்தில் அலுவலகப்பணியின் காரணமாக அவரால் வர இயலவில்லை.

இதனால் விக்ரம் தாக்கூர் தனது உறவினருடன் ஓமன் பயணமாகியுள்ளார். ஓமனில் இருந்து திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில், விக்ரம் தாக்கூர் மற்றும் அவரது உறவினர் ரோஷினியும் உயிரிழந்தனர். உறவினர்கள்மூலம் விபத்து குறித்து மனிஷாவுக்கு தெரியவந்துள்ளது.

மனிஷா இது குறித்து கூறுகையில், என் கணவர் இறந்ததை என்னால் நம்பமுடியவில்லை. அவர் என்னிடம் பிற்பகலில் பேசினார்.

திரும்பி வந்துகொண்டிருப்பதாக கூறினார். எனக்கு விபத்து குறித்து எதுவும் தெரியவில்லை. ரோஷினியின் சகோதரர் என்னைத் தொடர்புகொண்டபோதுதான் தெரியவந்தது.

நான் உடனடியாக காவல் நிலையத்திற்கு போன் செய்து கேட்டேன். அவர்கள் எனது கணவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். நான் காவல் நிலையம் சென்றபோதுதான் ரோஷினி உயிரிழந்ததும் எனக்குத் தெரியவந்தது என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers