தனக்கு பிறந்த குழந்தை என நினைத்து அன்பாக வளர்த்த தாய்... 23 வருடங்கள் கழித்து அவருக்கு தெரியவந்த உண்மை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சீனாவில் தான் பெற்றெடுத்த குழந்தை என நினைத்து வேறு குழந்தையை தாய் வளர்த்து வந்த நிலையில் 23 வருடங்கள் கழித்து வெளியான உண்மையால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சியூ ஜியோசுகான் (54) என்ற பெண் கடந்த 1995ஆம் ஆண்டு 15 மாத ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார்.

அப்போது திடீரென அவரின் குழந்தையை யாரோ கடத்தி சென்றுள்ளார். இது குறித்து பொலிசில் சியூ புகார் அளித்த நிலையில் அதே பகுதியில் கடத்தப்பட்ட ஒரு குழந்தையை சில மாதங்கள் கழித்து பொலிசார் கண்டுபிடித்தனர்.

அது சியூவின் குழந்தை தானா என அறிய நீதிமன்றம் மூலம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அந்த குழந்தை சியூவின் குழந்தை தான் என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து குழந்தையை சியூ வளர்க்க தொடங்கினார்.

இந்நிலையில் கடந்தாண்டு இறுதியில் 48 வயதான செவிலியர் ஒருவர் லீ ஜின்சன் என்ற இளைஞரை தன்னுடன் அழைத்து கொண்டு சியூவை பார்க்க வந்தார்.

அவரிடம், இந்த லீ தான் உங்களுக்கு பிறந்த மகன், நான் தான் அவனை 23 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தி சென்றுவிட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார் சியூ, இது தொடர்பாக பொலிசிடம் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில் செவிலியருக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர் சியூவின் குழந்தையை திருடி சென்று வளர்த்தது தெரியவந்தது.

ஆனால் அதன்பின்னர் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து லீயை சியூவிடமே ஒப்படைக்கலாம் என முன்னரே அவர் நினைத்த போது தனக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்ற பயத்தால் அவ்வாறு அவர் செய்யவில்லை என தெரியவந்தது.

இதனிடையில் நீதிமன்றம் மூலம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் வேறு குழந்தையை சியூவுக்கு பிறந்த குழந்தை என பொய்யாக கூறப்பட்டது சியூவுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையடுத்து தனக்கு நஷ்டஈடு வழக்குவேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

குழந்தையை கடத்தி சென்ற செவிலியருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers