ஊருக்குள் நடமாடும் 14 சிங்கங்கள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்க நகர் ஒன்றில் 14 சிங்கங்கள் ஊருக்குள் உலாவருவதையடுத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Phalaborwa நகரிலுள்ள வன விலங்கு அலுவலர்கள், 14 சிங்கங்கள் ஊருக்குள் உலா வருவதாக தெரிவித்துள்ளதோடு பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அந்த சிங்கங்கள், Kruger தேசிய வன விலங்குகள் பூங்காவிலிருந்து தப்பியிருக்கலாம் என சந்தேகிப்பதாக அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இதே வன விலங்குகள் பூங்காவில், குழந்தை ஒன்று அதன் குடும்பத்தினர் கண் முன்னேயே சிறுத்தைப்புலி ஒன்றால் கடித்துக் குதறி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers