பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி: வெளியான சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வங்கதேச பிரதமரை அழைத்துவர சென்ற விமானி ஒருவர் பாஸ்போர்ட் இல்லாமல் அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கட்டார் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது குறித்த விமானி கடவுச்சீட்டு இன்றி அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, சவுதி அரேபியா, ஜப்பான் மற்றும் பின்லாந்து உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பின்லாந்தில் இருந்து அவரை அழைத்துவரும்பொருட்டு வங்கதேசத்தின் பிமான் விமான சேவை நிறுவனம் ஃபஸல் மஹ்மூத் என்ற விமானியை அனுப்பியுள்ளது.

குறித்த விமானி கட்டாரில் தரையிறங்கியதும், அவரது பாஸ்போர்ட்டை அங்குள்ள அதிகாரிகள் கோரியுள்ளனர்.

ஆனால் அப்போது விமானி ஃபஸல் மஹ்மூத்திடம் அவரது பாஸ்போர்ட் இல்லை என கூறப்படுகிறது.

இந்த தகவல் வங்கதேசத்தில் உள்ள பிமான் விமான சேவை நிறுவனத்திடம் கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விமானி ஃபஸல் மஹ்மூத்தின் கடவுச்சீட்டை அடுத்த விமானத்தில் கொடுத்தனுப்பியுள்ளனர்.

மட்டுமின்றி பிரதமர் ஹசினாவை அழைத்துவர வேறொரு விமானி பின்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பிமான் விமானி ஃபஸல் மஹ்மூத் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கிய விவகாரம் விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers