துபாயில் பயங்கர விபத்து - 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலி...!

Report Print Abisha in ஏனைய நாடுகள்

ஐக்கிய அமீரக நாடான துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

தூபாய் அருகே நெருக்கியதும் பேருந்து விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த இந்தியர்கள் 8பேர் உள்பட 17பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர். மேலும், 5பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.விபத்தில் 8 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

இதில் பலியான இந்தியர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers