பெண்கள் இப்படி ஆடை அணிந்து வந்தால் போனஸ் வழங்கப்படும்... நெகிழ வைத்த நிறுவனம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பெண் ஊழியர்கள் வேலைக்கு மேக்-அப், ஸ்கிர்ட் போன்ற ஆடைகள் அணிந்து வந்தால் போனஸ் வழங்கப்படும் என ரஷ்யா நிறுவனம் அறிவித்துள்ளது.

Tutprof என்ற அலுமினியத்தில் நிபுணத்துவம் பெற்ற ரஷ்யா நிறுவனம், வேலை நாட்களை அழகுபடுத்த இவ்வாறு அறிவித்துள்ளது. ஒரு மாத கால நடைபெறும் பெமினிட்டி மாரத்தானின் ஒரு பகுதி இது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்கேற்பாளர்கள் மேக்-அப், ஸ்கிர்ட் போன்ற ஆடைகள் அணிந்து, தங்களது புகைப்படத்தை மற்ற ஊழியர்களுக்கு அனுப்பினால் அவர்களுக்கு 100 ரூபிள் போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பலர் தானாகவே வேலைக்கு பேண்ட் அணிந்து வருகின்றனர். அதனால், தான் இந்த நடவடிக்கை, இது அவர்களை பெண்ணாக உணர வைக்கும் என நாங்கள் நம்பினோம் என அந்நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் அனஸ்தேசியா கிரிலோவா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முயற்சிக்கு நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் ஒருவரான Sergey Gennadevich Rachkov தான் காரணம். அவர் நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியரிடமும் பெண்களின் கொள்கையை பாதுகாக்க விரும்புகிறார்,

அதனால் பெண்கள் ஆண்கள் போல சிகை அலங்காரங்களை செய்ய தேவையில்லை, பேண்ட் ஆடை அணிய தேவையில்லை, பெண்கள் கைவினைப்பொருட்கள் செய்வது,

குழந்தைகளை வளர்ப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என அவர் விரும்பியதாக அந்நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் அனஸ்தேசியா கிரிலோவா தெரிவித்துள்ளார்.

இந்த பெமினினிட்டி மாரத்தானிற்கு வேறுபட்ட எதிர்வினைகள் வந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலர் இதற்கு ஆதரவு தந்துள்ள நிலையில், பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்