டென்மார்க் நாட்டில் உள்ள தீவு ஒன்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய விழாவினை முன்னிட்டு அங்குள்ள மக்கள் சுமார் 800 திமிங்கலங்களை கொன்றுள்ளனர்.
டென்மார்க் பிராந்தியத்தில் உள்ள ஃபாரோ தீவு மக்களே ஆண்டு தோறும் இந்த திமிங்கல வேட்டையில் ஏற்படுகின்றனர்.
படகுகளில் சென்று பிடிக்கப்படும் திமிங்கலங்களின் தலையை வெட்டி அதன் ரத்தத்தை கடலில் பீச்சுகின்றனர்.
பின்னர் அதன் உடல் பாகங்களை உணவுக்காக பதப்படுத்தி வைக்கின்றனர். இதுவே ஃபாரோ தீவுவாசிகளின் முக்கிய உணவு.
ஆண்டு தோறும் டென்பார்க் அரசின் அனுமதியுடன் இந்த திமிங்கல வேட்டையில் ஃபாரோ தீவு மக்கள் ஈடுபடுகின்றனர்.
2,000 திமிங்கலங்களை வரை வேட்டையாடிய காலமும் உள்ளதாக இங்குள்ள மக்கள் பெருமை பேசுகின்றனர்.
ஆனால் திமிங்கல வேட்டைக்கு எதிரான போராட்டமும் இங்கு வலுவாக உள்ளது. ஜப்பானில் இதுபோன்ற திமிங்கல வேட்டைக்கு எதிராக போராடிய தனியார் அமைப்பு ஒன்று, ஃபாரோ தீவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.