சிரியா உள்நாட்டுப் போரை அம்பலப்படுத்திய 9 வயது சிறுமியின் நெஞ்சைப் பிசையும் கோரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சிரியாவில் உள்நாட்டுப் போர் கொடூரங்களை டுவிட்டர் வாயிலாக உலகிற்கு அம்பலப்படுத்திய சிறுமி, அகதிகள் தொடர்பில் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் குடும்பத்துடன் துருக்கியில் குடியிருக்கும் சிறுமி பானா அலபிட், சிரியா உள்நாட்டு யுத்தம் தொடர்பில் டுவிட்டரில் தமது கருத்துகளை பகிர்ந்தபோது அவரது வயது 7.

ஆங்கில மொழியில் தமது குடியிருப்புக்கு அருகாமையில் நடந்தேறும் கொடுமைகளை டுவிட்டர் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார் சிறுமி பானா.

அவரது பதிவுகள் அனைத்தும் உலக அரங்கை உலுக்கியது. தற்போது குடும்பத்துடன் துருக்கியில் குடியிருக்கும் பானா,

சிரியாவில் அந்த பழைய வாழ்க்கையை தாங்கள் இழந்துள்ளதாகவும், யுத்தம் எப்போது துவங்கியதோ அப்போதே எல்லாம் தலைகீழானது என கலங்கும் சிறுமி பானா,

நானோ அல்லது தமது குடும்பத்தில் ஒருவரோ கொல்லப்படலாம் என்ற அச்ச உணர்வுடனே தினந்தோறும் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் தமது தோழி யாஸ்மின் கொல்லப்பட்டதை கண்கூடாக பார்த்ததாக கூறும் பானா, பல நாட்கள் உணவு தண்ணீர் இன்றி வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள அகதி சிறார்கள், குறிப்பாக சிரியா நாட்டவர்கள் வெடிகுண்டு தாக்குதல்களாலும், போராலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நாடுகளில் அமைதியை கொண்டுவந்தால், அவர்கள் தங்கள் நாடுகளுக்கு சென்று அமைதியான வாழ்க்கை வாழலாம் எனவும் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளை ஒப்பிடுகையில் துருக்கியில் மட்டுமே அகதிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சிரியாவில் இருந்து மட்டும் 3.6 மில்லியன் அகதிகள் துருக்கியில் குடியிருந்து வருகின்றனர்.

தற்போது துருக்கி குடிமகளாக இருந்தும் சிறுமி பானா, தமக்கு சிரியா செல்ல வேண்டும் எனவும், அந்த பழைய நாட்களை மீண்டும் வாழ வேண்டும் எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்