எண்ணெய் கப்பல்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: ஈரான் மறுப்பு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அரபு நாடுகளின் கூட்டமைப்பு தங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஃபஜைரா அருகே கடந்த 13ஆம் திகதி 4 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் தெரிவித்தன.

ஆனால், இந்த தாக்குதலுக்கு யாரும் நேரடியாக பொறுப்பேற்காத நிலையில், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இந்தத் தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கிறது என்று குற்றம்சாட்டின.

இதனை ஈரான் மறுத்த நிலையில், இதுவரை இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் இதுதொடர்பாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் மவுசாசி கூறுகையில்,

‘அரபு நாடுகள் கூட்டமைப்பில் சில அரபு தேசங்கள் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இவை சவுதியின் முயற்சியால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் ஒரு பகுதி’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers