நான் ஒரு பெண்ணின் தலையை வெட்டினேன், அதற்காக வருந்துகிறேன்: ஒரு தீவிரவாதியின் வாக்குமூலம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மொராக்கோவுக்கு சுற்றுலா சென்ற ஸ்காண்டினேவிய பெண்கள் மர்மமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தான் ஒரு பெண்ணின் தலையை வெட்டியதாக பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஒரு நபர்.

டென்மார்க் மாணவியான Louisa Vesterager Jespersen(24) மற்றும் நார்வேயைச் சேர்ந்த Maren Ueland (28) இருவரும் அட்லஸ் மலைகளுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது கழுத்தறுபட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.

முதலில் யாரோ அவர்களை கொலை செய்து விட்டார்கள் என்று மட்டுமே மொராக்கோ அதிகாரிகள் எண்ணியிருந்த நேரத்தில், கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் தலையை வெட்டும் வீடியோ ஒன்று வெளியானது.

வீடியோவில் ஒருவர், இவர்கள் அல்லாவின் எதிரிகள் என்றும் சிரியாவில் ஜிகாதிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காகவே அந்த இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டதாகவும் கூறியதையடுத்து வழக்கு திசைமாறியது.

சம்பவம் தொடர்பாக 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த குற்றவாளிகளில் ஒருவரான Abdessamad Ejjoud (25) என்பவர், அந்த ஸ்காண்டினேவிய பெண்களில் ஒருவரின் தலையை தான் வெட்டியதாகவும் அதற்காக தான் வருந்துவதாகவும் தெரிவித்தார்.

இன்னொரு பெண்ணை தனது கூட்டாளியான Younes Ouaziyad கொலை செய்ததாகவும் Ejjoud தெரிவித்துள்ளார். அத்துடன் தாங்கள் ஐ.எஸ் அமைப்புக்காக அந்த கொலைகளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார் Ejjoud.

சட்டப்படி இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும், ஆனால் 1993இலிருந்து மொராக்கோ மரண தண்டனை விதிப்பதை நிறுத்தி வைத்துள்ளதால் குற்றவாளிகளின் தலையெழுத்து என்னவென்று தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers